Thursday, 13 September 2012

என் காதல்-9

சென்னை வந்தடைந்தேன்
சீராக விமானநிலையம் விட்டு வெளியேறினேன்
சுறுசுறுப்பாக  வாடகை வண்டியை பிடித்தேன்
சந்தோஷமாய் என்னவளிடம் பேசத்தொடங்கினேன்

நாளை  சந்திக்க வேண்டும் என்றேன்
நான் சித்தம் என்றாள்
நகைப்பு  நிறைந்தது மனதில்
நன்றி என்று கூறினேன்

வந்தது அவளுக்கு பெருங்கோபம்
விடாது திட்டிக்கொண்டே இருந்தாள்
விஷயம் என்ன என்பதை புரிந்து கொண்டேன் - அதை
விட்டு விட மன்றாடினேன்

காதலில் நன்றிக்கு இடமில்லை
கடுகலவிற்கும் மன்னிப்புக்கும் இடமில்லை
காலம் முழுவதும் புரிதலே
கன நேரமும் இல்லை சந்தேக நெருடலே

வந்து சேர்ந்த நேரம் அதிகாலை
வரம் கொடுத்தாள் என் தேவதை
விமான பயண களைப்பு வருடுதே
வின்மீன்கள் கன் சிமிட்டுதே

உறங்க ஆரம்பித்தேன்
உறக்கம் இன்றி தவித்தேன்
உலக அழகியை காண துடித்தேன்
உருண்டு உருண்டு புரண்டேன்




அதிகாலையிலே கண் விழித்தேன்
அவசரமாய் கெளம்பினேன்
அவளை காணும் ஆவலுடன் இருந்தேன்
ஆவலுடன் கனவுலகில் உலவினேன்

பேருந்து நிலையம் சென்றேன்
பேரழகியின் வருகைக்கு காத்திருந்தேன்
பேசிக்கொண்டே இருந்தேன் - அவள் சொன்னாள்
பேரழகா உன்னை நெருங்கிக்கொண்டே இருக்கிறேன்










 

No comments:

Post a Comment