Monday, 17 September 2012

என் காதல்-13



பிரச்சினைகள் எத்துனை வந்தாலும்
பிரியாது வாழ்வோம்
பிரிவென்பது காதலுக்கு இல்லை என்போம்
பகுத்தறிவு கற்பிப்போம்

அளவில்லா அன்பினை தேக்கி வைத்தேன்
அவளிடம் அத்துனையும் சேர்பித்தேன்
அளவற்ற்ற காதலை பகிர்ந்தேன்
அலைகள் ஓயாது என்பதை உணர்ந்தேன்

தினம் தினம் அவளை காண எண்ணினேன்
திரைகள் அனைத்திலும் அவள் முகம் படித்தேன் - கண்
திறந்ததும் அவளை கண்டு மகிழ்ந்தேன் - என்
திறனை கண்டு  அவளை வியப்படைய வைத்தேன்

கண்விழித்ததும் அவள் முகம்
காதுகளில் அவள் கானம்
கால்களில் மெல்லிய நடனம்
காதலில் சிறிது மயக்கம்

குழந்தையை நேசிப்பது போல நேசித்தேன்
குழைந்து குழைந்து அன்பை செலுத்தினேன்
குழையா வண்ணம் காதலை பெருக்கினேன்
குறைபாடுகளை மெல்ல குலைத்தேன்

ஆயிரம் காலத்து பயிர் இது
ஆண்டவன் கருணை அவசியமானது
ஆண்டாள் பெருமாளிடம் கொண்ட காதல் போன்றது
ஆதம் இவளிடம் இருந்து தொடங்கியது

அனார்கலி சலிமினால் வாகை சூடியது
அம்பிகாபதி அமராவதி மூலம் வளர்ந்தது
அணைத்து ஜீவராசிகளிடமும் இருப்பது
அன்னையின் அன்பையும் மிஞ்சியது

இன்னல்கள் பல நிறைந்தது
இனிமையான நினைவுகளை கொண்டது
இவ்வுலகினை மறக்க செய்வது
இமயத்தை விட பெரியது

ஈர்பிலே ஆரம்பிப்பது
ஈர்த்த பின்னர் விலகாதது - புவி
ஈர்ப்பினை விட பன்மடங்கு வலியது
ஈட்டி முனை போல் கூர்மையானது

எவரை கண்டும் அஞ்சாதது
எவ்வாறேனும் ஒன்று சேர துடிப்பது
என்றும் அழியாதது
எவரையும் வெல்வது

========================== தொடரும்






5 comments:

  1. காதல் என்ன என்னவெல்லாம் செய்யுது....!!!

    ம்ம்ம்... அழகாக அடுக்கியுள்ளீர்கள் காதலை.

    (மன்னிக்கவும் ஒரு வரிதான் நெருடுகிறது....)
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நெருடிய வரியை மின்னஞ்சல் செய்யுங்கள் ... மாற்றி அமைக்க முயற்சிக்கிறேன்

      Delete
  2. நிறைய விதமாக காதலை பதித்துள்ளிர்கள்....அருமைதான் சுகுமார்...

    ReplyDelete
  3. அருமை....தொடருங்கள்

    ReplyDelete
  4. தங்கள் மறுமொழிகளுக்கு ஆயிரம் பதினாயிரம் நன்றிகள்

    ReplyDelete