Tuesday, 18 September 2012

என் காதல்-15

  போட்டி ஒன்று வந்தது
பிறந்த நாளுக்கு யார் முதல்  வாழ்த்துவது
பிறப்பிலே போட்டிகளை எதிர்கொள்பவன்
பிறந்த நாள் வாழ்த்தில் தோர்பானேன்!

இரவு  பதினொன்று ஐம்பது
இம்மியளவும்  பிசகாது  அவளை  அழைத்து
இசை  பாடினேன்  சிறிது
இனிமையாய் கூறினேன் வாழ்த்து

ஈன்றவர்கலிம் வாழ்த்து பெற்றாள்
ஈஞ்சம்பாக்கம் செல்லவேண்டும் என்றாள்
ஈ  போல  பறந்து வர சொன்னாள்
ஈர்த்துக்கொண்டு செல்ல எண்ணினாள்

சாய் நாதனை தரிசித்தோம் 
சகலமும் நலமாய் முடிய வேண்டினோம் 
சந்தோஷமாய் முதுகலை பதிவினை நிரப்பினோம்
சாரலில் நனைந்து திரிந்தோம்
 
வேதம் படம் பார்க்க தோன்றியது
வேறு எண்ணம் இன்றி அதை மதி செய்ய துடித்தது
வேகமாய் சீட்டுகள் பெற்றாகிவிட்டது
வேர்க விருவிருக்க அரங்கினில் சென்றகி விட்டது

இனிதாய் கதைத்தோம்
இன்பமுடம் என்றும் இருக்க எண்ணினோம்
இன்று போல என்றும்  அமைய வேண்டினோம்
இனிய பண்ணிசைத்து விடை கூறினோம்

==============================================தொடரும்

No comments:

Post a Comment