Thursday, 13 September 2012

என் காதல்-8



சொன்ன விதம் பிடிக்கவில்லை
சொல்லியே விட்டாள்  அதனை
சொற்களை  தேடினேன் அவளை
சமதானமக்க - என்ன சொன்னாலும் கோபம்  குறையவில்லை

சொல்லிவிட்டேன் என்ற மகிழ்ச்சியும்
சொன்னது சரிவர இல்லை என  இகழ்ச்சியும்
சூழ்ந்து என்னை வாட்டிய வதைப்பும்
சுருங்கிய என்  மனமும்

தவிப்பு அடங்கிப்போனது
தூக்கம் விலகி சென்றது
தனிமை சூழ்ந்து கொண்டது
தாங்க முடியா வலி ஆட்கொண்டது

என்ன கொடுமை இது
என்னை மட்டும் வாட்டுது
என் விரோதிக்கும் இது நேர கூடாது
என்னவளிடம் இருக்க கூடாது

பணிக்கு சென்றேன்
பிடிப்பிள்ளது இயங்கினேன்
பரவசம் இன்றி சிரித்தேன்
பாரத்துடன் தடுமாறினேன்

குறுஞ்செய்தி பரிமாற்றம்
காதல் அரங்கேற்றம்
கண்களில் பெரும் ஏக்கம்
காண வேண்டும் என அசைகள் ஓராயிரம்

அழைத்தேன் அவளை
அன்பாக சொன்னேன் காதலை
ஏக்கம் தாங்க முடியவில்லை
என்றும் எங்களுக்கு வானமே எல்லை

அவள் ஒப்புக்கொண்டாள் - இம்முறை
அலைக்கழிக்காது என்னை - மறுமுறை
அழைத்தேன் அவளை - பகிர்ந்தேன்
அளவற்ற்ற காதலை

அன்றிரவு என் சென்னை பயணம்
அளவில்லா  மகிழ்ச்சியில் என் மனம்
ஆடி பாடி கொண்டே சென்றேன்
அவளை மகிழ்வித்து கொண்டே வந்தேன்

கனம் யுகமாவது இது தானோ
காதல் என்றாலே இருக்குமோ
காண துடிக்கும் ஏக்கமோ
காத்திருக்க தான் முடியுமோ?

விமான நிலையம் வந்தேன்
விரைவாக  பயண சீட்டு பெற்றேன்
வேகமாய் ஆய்வுகளை முடித்தேன்
விமான நேரத்திற்கு காத்திருந்தேன்

அறிவிப்பு கேட்டேன்
அலறி அடித்து ஓடினேன்
அமர்ந்த பின்னரே  சுவாசித்தேன்
ஆழ்ந்த  சிந்தனையில் மூழ்கினேன்

முழுவதும் அவள் நினைவுகளே
மதியினில் அவளுடன் இருந்த கணங்களே 
மனதினில் பொங்கின அலைகளே
மயக்கத்திலும் தோன்றுகின்றன அவள் கண்களே

அலைபேசியை எடுத்தேன்
அவள் எண்ணை அழைத்தேன்
ஆவலுடன் காத்திருந்தேன்
அவளுடன் சல்லாபித்தேன்

அழகிய மங்கை அறிவித்தாள்
அனைத்து மின்னணு கருவிகளையும் அணைக்க சொன்னாள்
அவளிடம் அதை கூறினேன்
அனைத்து விட்டேன் என் அலைபேசியை

விமானம் இயங்க தொடங்கியது
வியர்த்து கொட்ட ஆரம்பித்தது
வியப்பாய் எனக்கு  இருந்தது  -அதற்கு
விடை தெரியாமல் இருந்தது

பறக்க ஆரம்பித்தோம் விமானத்தில்
பாரம் குடிகொண்டது என் மனதில்
பரந்து காணும் வானில்
பரதேசியாய் நான் என்ற தவிப்பில்

திருமலையை நெருங்கினோம்
திருவேங்கடன் ஆலயத்தினை விண்ணிலிருந்து தரிசித்தோம்
திருப்பொன்னால் அலங்கரித்தை கண்டு வியந்தோம்
திருவருள் பெற்றது போல் உணர்ந்தோம்

மனதில் பெருங்குழப்பம் - என்
மனராணி கண்கள் அழகானதா ? - இல்லை
மஹா விஷ்ணு வேங்கடனின் கோபுரம் அழகானதா?
மடத்தனமோ இது எனக்குள்ளே???

============================================ தொடரும்







4 comments:

  1. காதலிப்பதே ஒரு வழிபாடுதான் நண்பரே!

    ReplyDelete
  2. @kuttan thangal marumozhikku mikka nandri anbare... aam unmai than.... kaathal oru vazhipaadu than....

    ReplyDelete
  3. அருமையான பதிவு மேலும் தொடர என் வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. @yayathin mikka nadri.... thodarnthu padhithu kondu irukkiren... en kaadhal padhivugal 9 mudhal 16 varai vaasithu thangal karuthukkalai en valai pakkaththil padhikka vendugol!

      Delete