Monday, 17 September 2012

என் காதல்-12

கனவுலகில் வாழ்வது இனிமையானது
கனவுகள் என்றுமே தித்திப்பானது
காரிருள் சூழ்ந்தது போல் தெரிந்தது
கருவரையில் இருப்பது போல உணர்விது

நினைவுலகம் கொடுமைகள் நிறைந்தது
சந்தோசம்  மிகுந்தது
சண்டைகளுடன்  கூடியது
சச்சரவுகள் உடன் நகர்வது

வாழ்ந்தே ஆகவேண்டும்
பெற்றோரின் சம்மதம் பெற்றே ஆகவேடும்
உற்றார் உறவினரின் ஏச்சுக்கு ஆலகதிருக்கவேண்டும்
உண்மையாய்  என்றும் இருக்க வேண்டும்

மனதில் கோஷங்கள் பல
மண்டையில் ஆக்ரோஷங்கள் பல
மதியில் தோன்றுது அழ
மரணங்கள் என்னுள் சில 

நித்தமும் சந்தோசம்
அணு தினமும் ஏக்கமும்
இரண்டும் கலந்த கலவை
இந்நாளின் என் வாழ்கை

பெரும் பிரச்சினை ஒன்று
சாதி என்ற பெயரில் இன்று
அதை முறியடிப்பது  எவ்வாறு
சமுகத்தை சிறிது தூர்வாரு

தினம் தினம் அலுவலும்
நித்ததும் நினைவில் அவளும்
சலனமின்றி கால்களும்
சிந்தனை இன்றி நானும்

கவலைகள் பல
சந்தோஷங்கள் பல
கனவுகள் பற்பல
சண்டைகள் அவளுடன் சில

அவளின் கல்வி முடிந்தது
அவள் பணிக்கான தேடல் துவங்கியது
அனைத்துமாய் நான் இருந்தேன்
அவளுக்காக பனி தேடினேன்

கிடைத்தது ஒரு வேலை
அதுவும்  வாரத்தில் ஆறு நாள் வேலை
அவளுக்கு அது பிடிக்கவில்லை
அவளை வருத்த எனக்கு விருப்பமில்லை

ஆகவில்லை ஒரு மதம் கூட
கூறினேன் அவளிடம்  அதை நிறுத்திட
எனக்காகவே அவள் மீண்டும் பணி தேடினாள்
அப்படித்தான் நாங்கள் சந்திக்க இயலும் என்றாள்

============================================ தொடரும்






No comments:

Post a Comment