Wednesday, 12 September 2012

என் காதல்-7

உள்ளே சென்றபின் அவள்
உணவு உண்ண  வில்லை என்றாள்
உருக்குலைத்தது அவளின் சொல்
உடனே உண்டி சாலையை நோக்கி சென்றது கால்

சந்தோஷமாய் சாப்பிட்டாள் - என்னை
சூரயாடினால் ஓர விழியினால்
சலனமின்றி  நின்றேன்
சகலகலாவல்லவன் ஆனேன்

மூன்றாம் சந்திப்பு இது - இனிய
முற்பகல் காலமானது - புன் சிரிப்பு
முகத்தில் தோன்றியது - எண்ணங்கள் வேகமாய்
முன்னோக்கி சென்றது

காதலிப்பவர்களுக்கு  இருப்பதில்லை பொறுமை
இது தானோ படைத்தவனின்  திறைமை
அவன் அறிவு  சிந்தனையோ அருமை
பாடாமல் இருக்க முடியவில்லை அவன் பெருமை

திரையில் படம் ஓட- எங்கள்
மனங்கள் வின்னுலகில் பறக்க
இருதயங்கள் படபடத்து துடிக்க
இருவரும் தவிப்பினை மறைக்க

இன்றாவது சொல்வேனா அவளிடம்
இருக்குமா அவள் மனத்தில் காதலுக்கு புகலிடம்
இதயத்தின் சொல்லை கேட்கவா
இல்லை இன்னும் காத்திருக்கவா??

விடை தெரியா  கேள்விகள் பல
விடை தேடி அலைந்த நாட்கள் பற்பல
விடை கொடுத்து விடுவாளோ எனக்கு
விம்மி அழுகிறேன் - கேட்கவில்லையா உனக்கு

இருக்கைகலில்  அமர்ந்தோம்
இவ்வுலகினை மறந்தோம்
இன்ப வெள்ளத்தில்  திணறினோம்
இக்கணமே இணைந்து வாழ நினைத்தோம்

நினைத்ததை சொல்லிவிடு
நிம்மதியாய் இருந்து விடு
நித்திரையை திரும்ப பெற்றிடு - மனமே
நிதானத்துடன் எல்லாம் கூறிவிடு

கதைக்க தொடங்கினேன் - அவள்
காதருகில் மெதுவாக
நோக்கினால் என்னை பண்பாக- சிறிது
நோகடித்தல் என்னை அன்பாக

காட்சி ஆரம்பித்தது
கவனம் அதன் மேல் செல்ல மறுத்தது
காதலி அருகில் இருக்க
கவனம் எதன்  மேல் இருக்கும்?

அருகில் அவள் இருக்க
அனைத்து  வார்த்தைகளை  நான் ஆராய
அவள் என்னிடம் பேசிக்கொண்டே செல்ல
அவளிடம் காதலை சொல்ல நான் தடுமாற

ஏன் எனக்கு மட்டும் இக்கொடுமை
நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூற அறியாமை
காதலிப்பதை விட சொல்வது  தான்\கடினமோ
கட்டுக்கடங்காத மனதிற்கு போட்டுவிட்டேன் கடிவாளமோ ?

படத்தில் சொல்வது அத்தையும் பொய்யப்பா- அவளை
பார்த்து காதலை சொல்வது கடினப்பா
பார்க்காத பொது சொல்ல தோன்றாதே
பார்த்து பார்த்து வார்த்தைகளை கோர்க்க வேண்டுமே ?

எவ்வளவோ பேசினேன் அவளிடம்
என் மனதில் உள்ளதை சொல்ல தடுமாற்றம்
எண்ணியதை சொல்ல ஆதங்கம்
என்றுமே முடியாமல் போகுமோ என்ற தயக்கமும்

அவளுக்கு என் மேல் காதல் உள்ளது
அதை என் மனம் உணர்ந்தது
அவளுக்கும் அதை சொல்ல தயக்கம்
அண்ணலுக்கும் அவளுக்கும் காதல் மயக்கம்

சொல்கின்ற ஒவ்வோர் சொல்லிலும்
சமுத்திர அலை போல காதல் பொங்கும்
சொல்ல தான் தயக்கம் - அனால்
சொல்லிவிட வேண்டும் என ஏக்கம்

இருதலை காதல் தான்  இது
ஒரு தலை காதல் போன்ற தவ்விபிது
இருவருக்கும் வேண்டும்
இருவருக்கும் வெளிப்படுத்த பயம்!

காட்சி முடிந்தது
கண்களில் ஏக்கம் நிரம்பியது
கண்ணீர் மல்க விடை கொடுத்து
கனமான நெஞ்சங்கள் செல்ல நேர்ந்தது

இருவருக்குள்ளும் ஒரே அலைகள்
அவள் ஏற்பாளா  என நான்
அவன் ஏற்பான என அவள்
அணைக்கட்டு மலை போல் ஆனது

அணையை உடைக்க வேண்டும்
அப்போது தான் வெள்ளம் பாயும்
அன்றிலிருந்து தேடினேன் சந்தர்பம்
அளவில்லா ஏக்கமும் ஆனது சொந்தம்!

மும்பை பயணம் செல்ல வேண்டும்
அலுவலை சீராக முடிக்க வேண்டும் - திரும்பிய உடன்
அவளிடம் காதலை சொல்லியே ஆகா வேண்டும்
அவள் காதலன் என்ற நிம்மதி வேண்டும்!

விமானம் ஏறினேன்
விண்ணில் பறந்தேன்
விம்மி தேம்பி அழுதேன் - ஏனெனில் அவளுக்கு
விடை கொடுத்து வந்தேன்

அலுவல் பனி முடித்தேன்
அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்
அவளின் நினைப்பிலே இருந்தேன்
அவளும் அப்படித்தான் என அறிந்து மகிழ்ந்தேன்

அழைத்தேன் அலை பேசியில்
அவள்  எடுக்கவில்லை அம்முனையில்
அழுகை வருகிறது என் கண்ணில்
அழைப்பால அவள் என்னை இம்முனையில்

பல முறை முயற்சித்தேன்
பலனில்லாது பரிதவித்தேன்
பயண களைப்பினால் குலைந்தேன்
பிரச்சினை ஏதானும் வந்ததென பயந்தேன்

மறுபடியும் அழைத்தேன்
மறுமுனையில் அவள் குரல்
மறந்து விட்டேன் அலைபேசியை எடுத்து செல்ல
மன்னித்து விடு என்றாள் !

பேசுகையில் தவிப்பு தெரிந்தது
பேசிக்கொண்டே காதலை சொல்லிவிட்டேன் 
பேயடித்து நின்றாள்
பேசியது உண்மையா என்றாள்

ஆமாம் என்றேன்
ஆமாம் என்றாள் - என்
அரவணைப்பு வேண்டுமென்றாள்- இதற்க்கு
ஆவலுடன் காத்திருந்தேன் என சொன்னாள் !!!!


===================================== தொடரும்






No comments:

Post a Comment