Friday 14 September 2012

என் காதல்-11

  செய்து கொடுத்தேன் சத்தியம் ஒன்று
நான் இனி புகைப்பது இல்லை என்று
அது அமலில் ஆனது இன்று
அவள் அனுமதிப்பது என்று?

அவள் நினைவுகளிலே பயணித்தேன்
அனைத்தையும் மறந்தேன்
அவளின் புண் சிரிப்பில் மயங்கினேன்
அவள் இன்றி வாழ்வில்லை என முடிவெடுத்தேன்

நினைவலைகள் எங்கோ சென்றன
நினிவினில் ஏதும் நில்லாமல் இருந்தன
நித்தமும் அவள் எண்ணங்கள் எழுந்தன
நிஜத்தினில் எண்ணங்கள் இருக்க மறந்தன

வாழ்வியல் தத்துவம் புரிந்தது - என்
வாழ்க்கை அவளுக்கென தெரிந்தது
வாழ்நாள் முழுவதும் அவளுக்கு அர்பணித்து
விண்ணுலகில் அவளுடன் பயணித்து

அவள் வீடு சென்றடைந்தாள் என செய்தி வந்தது
அளவில்லா இன்பம் உள்ளத்தில் தோன்றியது
அவளுடன் பேச ஆர்வம் தூண்டியது
அவள் வீட்டில் இருக்கிறாள் என்பது தடையாய்  நின்றது

சேர்ந்தேன் வீட்டிற்கு
சந்தோஷத்தில் தத்தளிப்பதற்கு
சண்டைக்கு இழுப்பதற்கு - இருக்கின்றனர்
சிநேகிதர்கள் என்றைக்கும்

உண்டேன் உணவினை
உடனே தட்டினேன் குருன்செயிதியினை
உறங்க தொடங்கலானேன்
உறக்கத்தில் ஆவலுடன் வாழ ஆரம்பித்தேன்

கனவுலகில் இருவரும் சேர்ந்தோம்
கள்ளங்கபடமின்றி வாழ்ந்தோம்
காதல் மிகுதியாய் பகிர்ந்தோம்
கணவன் மாணவி என வாழ்ந்தோம்

============================= தொடரும்




1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete