Tuesday 18 September 2012

என் காதல்-16

அவள் குடும்பம் ஊருக்கே சென்றது
அவள் விடுதியில் தங்க நேர்ந்தது
அது எங்களுக்கு சாதகமாய் ஆனது
அவளை நினைத்த பொது காண கொடுத்து வைத்தது

மீண்டும் பனி கிடைத்தது
மீண்டும் மீண்டும் சந்திக்கும் வைப்பு பெருகியது
மீன் போல் துள்ளி குதிக்க தோன்றியது
மீதமின்றி காதலை பகிர்ந்த உணர்வித்து

மாறினால் அவள் மற்றொரு விடுதிக்கு
மணாளன் தங்கி இருக்கும் பகுதிக்கு
மாலை நேரம் சந்திப்பு
மனதில் தினமும் தித்திப்பு

அறிய வாய்ப்பிது எங்களுக்கு
ஐந்து நிமிடங்களில் சந்திக்கும் வாய்ப்பிது
அவளுக்கு பெரும் வியப்பிது
அளவற்ற சந்தோஷம் குடி கொண்டது

மாதம் ஒன்று கடந்தது - என்
மாமியாருக்கு சந்தேகம் வந்தது
மாற்றிவிட்டால் அவள் நிவாசத்தினை
மன பாரத்தில் எங்கள் மனதினை

நோண்டி துளைத்தனர் கேளிவிகளால்
நோகடித்தனர் சுடு சொற்களால்
நோக்கும் வாய்ப்பு பறிபோனதால்
நொந்த மனங்களில் புலம்பல்கள்


============================தொடரும்

No comments:

Post a Comment