Monday 17 September 2012

என் காதல்-14

உண்ண மறப்பது 
உட்ற்றர் உறவினரை பொருட்படுத்தாதது 
உலகினை துறப்பது 
உள்ளத்தால் வாழ்வது 

ஊருலகம் தவிர்த்து 
ஊஞ்சலாடி திரிந்து 
ஊசலாடினாலும் கண்டுகொள்ளது 
ஊதாப்பு போல மென்மையானது 

ஏக்கம் கொடுப்பது 
ஏங்கி தவிக்க வைப்பது 
ஏறுமுகம் கொண்டது 
ஏமாற்றம் நிறைந்தது 

ஐய்யங்களுக்கு இடம் கொடுக்காதது 
ஐய்யமின்றி சிறந்து விளங்குவது 
ஐயம் தோன்றின் உடைந்து போவது 
ஐம்புலன்களையும் ஆட்டி வைப்பது 

ஒன்று சேர வைப்பது 
ஒன்றாய்  இருக்க தூண்டுவது - இரு உள்ளங்களை 
ஒன்றென செய்வது - உலகை 
ஒன்றிணைக்க வைப்பது 

ஓடா நிலை பெற்றது - பல தூரம் 
ஓட வைப்பது - நீர் 
ஓடை போல் சிலிர்ப்பூட்டுவது 
ஓடி ஓடி உழைக்க வைப்பது 

ஔவையார் பாடியது 
ஔவையை பாட்டியக்கியது 
ஒளஷதமாய் இருப்பது 
ஒள லா என சிறகடிக்க வைப்பது 

காதலை பல கோணங்களில் பார்ப்பினும் 
கண்விழிகளில் என்றும் அவள் தோற்ற்றம் 
காலமெல்லாம் அவள் நேசம் - எனக்கு 
கிட்டவேண்டும் என்றும் அவளின் பாசம் 

வேலை தேடல் மும்மரம் 
வேண்டுதல்கள் பல்லாயிரம் 
வேலை கிடைப்பது பெருங்கஷ்டம்
வேலை கிட்டவில்லை எனின் பெரும் நஷ்டம் 
 
பல நாள் கனவு - முதுகலை 
பட்ட படிப்பு 
பல முறை யோசித்து 
பளிங்கென எடுத்தோம் முடிவு!

அவளின் பிறந்த நாள் - என் 
அன்பு இவ்வுலகில் மலர்ந்த நாள் 
அன்பளிப்பு கொடுக்க திணறிய நாள் - என் 
அரவனைப்பில் அவள் மிகுந்த மகிழ்ச்சி கொண்ட நாள் !

======================================== தொடரும் 







No comments:

Post a Comment