Thursday, 6 September 2012

என் காதல்-6

மறைந்த புன்னகை அரும்பியது
மாற்றம் உடனே நிகழ்ந்தது - என்
மங்கையின் குரல் சக்தி புரிந்தது - என்
மனமே - உன் காதல் அளவு தெரிந்தது

சந்திக்கவேண்டும் என எண்ணினேன்
சந்திக்கலாமா நாளை என்று கேட்டாள் - பொங்கினேன்
சந்தோஷத்தில் நல செய்தி கேட்டதில் நான்
சரி என்ற சொல் மட்டும் கூறலாணேன்

அலுவலுக்கு சென்றேன் - மாய உலகில்
அவளுடன் திரிந்தேன் - நிகழ்காலத்தில்
அறவே இல்லாதிருந்தேன் - எதிர்காலத்தில்
அவளுடன் நித்தம் நித்தம் இருக்க ஆவல்

எந்நேரமும் சந்திப்பின் நினைவே
எதுவும் ஏற்க மறுக்குது மனமே
ஏறெடுத்து பார்க்க முடியவில்லை
எதையும் காண மனமில்லை

இரவெல்லாம் கண் விழித்தோம்
இன்பமயமாய் கதைத்துக்கொண்டிருந்தோம்
இனிமையாய் உலாவினோம் - அவள் குரல் என்னும்
இசை வெள்ளத்தில் மூழ்கினேன்

மறுதினம் காலை வரை பேசினேன்
மறந்த தூக்கத்தை எண்ணாமல் இருந்தேன்
மகிழ்ச்சி போங்க மலர்ந்தேன்
மேகத்தை தொட்டது போல் சிலிர்த்தேன்

எப்பொழுதும் போல அதே சத்யம் வாசல்
எவ்வளவு நேரத்தில் அவள் வருவாளென்ற ஆவல்
எத்தனை முறை சந்தித்தாலும் தீராத தென்றல்
ஏனென யோசிக்க முடியாமல் திணறல்

காத்திருந்தேன் அவள் வருகைக்கு
காதலின் அருமைக்கு!
காதுகள் சிலிர்த்து நின்றன -அவள்
காதருகில் வந்து கூப்பிடுவாள் என

வந்து சேர்ந்தால் அவள்
வந்திறங்கியது என்கண்ணில் மின்னல்
வருடியது முகத்தில் காதல்
வாடியது அவள் முகம் வியர்வையில்!

தங்குமா என் இதயம் இதை கண்டு
துடைத்தேன் கை குட்டையை கொண்டு
துள்ளலுடன் சிலிர்த்தால் என்னை கண்டு
தூண்டிலில் மீன் போல் சிக்கினேன் அவள் விழிகளை கண்டு!

அளவில்லா காதல் இருவரிடமும்
அணைக்கட்டு போல தடுமாற்றமும்
அடைவது எண்டு அவைளை என்ற எண்ணமும்
அதற்கு நானே தடை என்ற ஏமாற்றமும்

உள்ளே சென்றோம்
உள்ளங்கைகளை கோர்த்து நடந்தோம்
உள்ளத்தால் ஒன்று சேர்ந்தோம்
ஊமை போல மௌனத்துடன் இருந்தோம்



............................................................................தொடரும்

No comments:

Post a Comment