Thursday, 14 February 2013

என் காதல் 20 (முற்றும் )

புரிந்தும் புரியாமல் இருப்பது
பெரியோரின் கூட பிறந்தது 
காதலர்களுக்கு பிடிக்காதது 
காதல் என்றுமே ஏற்காதது 

காதலுக்கு அடி பணிந்தவர்க்கு 
காதலை தவிர வேறொன்று எதற்கு 
காதலில் இனிமை இருக்கு 
காதல் இல்ல வாழ்வெதற்கு

பெரியோர்களுக்கு அவகாசம் வேண்டும்
பெரியமனதுடன் ஏற்றுகொள்ள தொடரும்
பெரிதாய் உணர நாழியாகும்
பெரிதளவில் அவர்கள் உள்ளம் குளிரும்

எதிர்ப்புகள் குறைய துவங்கின
ஏற்றுகொள்ளும் சுவடுகள் தோன்றின
ஏற்க வந்தது அரை மனதுடன்
ஏற்க வைக்க வேண்டும் முழுமனதுடன்

புரிய வைத்தல் தொடங்கியது
புரிந்து கொள்ளுதலும் கூடியது
பிள்ளைகள் மகிழ்ச்சி பெரிது
பினைப்பில்லா நம்பிக்கைகள் தோற்றது

காலம் கூடி வர
காதலுக்கு வெற்றி சேர
கல்லுள்ளங்களும் கரைந்தன
காதலுக்கு வெற்றி கொடுத்தன

எதிர்பார்க்கும் குணங்கள் இருப்பின்
ஏகத்திற்கு பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி கொடுப்பின்
எக்கு தப்பை எதிர்பானேன்
ஏற்றுக்கொண்டால் போக போவதேன்

ஒரு மனதாய் ஏற்றுக்கொண்டார்
ஒன்றாய் வாழ வழி வகுத்தனர்
ஒன்றுக்கும் உதவா கொள்கைகள் கைவிட்டனர்
ஒரு நாள் நிர்ணயித்தனர்

பேச்சு வார்த்தைகள் துவங்கின
பேசி முடிக்கும் ஆர்வங்கள் கூடின
பேரின்பம் காதலுக்கு பேச்சுக்கள்  கொடுத்தன
பெற்றோரை காதலர்கள் பெருமை படுத்தின

நாட்கள் குறித்தனர்
நன்றாய் காதல் உள்ளங்களை குளிர வைத்தனர்
நன்றே நடக்கும் என நம்பினார்
நல்லுள்ளங்களில் ஆசீர்வாதங்களை அள்ளி தெளித்தனர்

களவும் கற்று  மற  
காதலை என்றும் மறா
கடினமாயினும் வெற்றி பெற
காலமும் வாழ்த்தும் நிறைய ------------ முற்றும் ----சுகுமார் ரா

2 comments: