Sunday 10 February 2013

என் காதல் 19(தொடர்ச்சி)

காலங்கள் மாறினாலும்
காதலர்களின் ஊடங்கங்கள் மாறினாலும் 
காதலின் வெளிப்பாடு மாறினாலும் 
காதல் மாறாதது அழியாதது 

எதிர்ப்புகள் பல வரும் 
ஏகத்துக்கு இடைஞ்சல்கள் ஏற்படும் 
எத்தனை காலம் ஆனாலும் 
என்றைக்கும் இருக்கும் காதல் 

வழக்கமான மிரட்டல்கள் 
வாழ்கை மேல் பயமுறுத்தல்கள் 
வண்டி வண்டியை சொன்னார்கள் 
வண்டுகள் போல மொய்த்தார்கள் 

விடாது எங்கள் முயற்சி 
விடமாட்டோம் எங்கள் பெயர்ச்சி 
வீறுகொண்டு எழுவோம் காதலுக்கு 
வெற்றி பெற்று வாழ்வோம் மகிழ்வோடு 

ஊடல் கூடல் பெருகியது 
ஊடங்கங்கள் உதவி கூடியது 
உள்ளிருக்கும் காதல் ஆகாயம்  தொட்டது 
உண்மை நிலை பெற்றோருக்கு புரிந்தது 

பெற்றோரின் பாசம் தேவை -அனால் 
பிற்போக்கு கருத்துக்கள் ஏற்க தேவை இல்லை
முற்போக்குடன் புரிய வைத்தோம் 
புரிந்தாலும் ஏற்க அவர் மனதில் இடம் இல்லை 

துடுக்குத்தனம் தலை தூக்கியது 
துடிப்புகள் கூடியது 
துன்பத்தை தடுக்க எண்ணம் வந்தது 
துடிதுடிக்கும் நெஞ்சங்கள் நிமிர்ந்து நின்றது 

ஆயிரம் கரங்கள் வந்தாலும் 
அழிக்க முடியாது காதலையும் 
அதனுடன் பெருகும் நேசத்தையும் 
ஆழ புரிந்தது அவர்களுக்கு அனைத்தும் 

------------------------------------------------------- தொடரும் ........... சுகுமார் ரா 


No comments:

Post a Comment