Friday 8 February 2013

என் காதல் 18(தொடர்ச்சி )

மோதல்கள் பெருகின் காதல் பெருகும்
பெட்ட்றோரின் எதிருப்புக்கு அது பொருந்தும்
தடை சொன்னால் தடுமாறுவது அக்காலம்
தடைகளை மீறி வாழ்வதே இக்காலம்

சொல்லம்புகள் எய்தனர்
சொற்போர் புரிந்தனர்
செல்லா கரணங்கள்  சொல்லினர்
செல்லாது எங்கள் காதல் என்றனர்

துடிப்பு கூடியது
வெறி ஏறியது
வெற்றி நோக்கி சென்றது
வேரூன்றி நின்றது

காரங்கள் வினாவினோம்
கரங்களால் அனைத்து கொண்டோம்
காதலித்ததே தவறாம்
காதலுக்கு கல்லறையாம்

இலங்குருதி அடங்குமா ?
இச்சொற்கள் கேட்டு மாறுமா ?
இல்லை இக்கொற்றினை ஏற்போமா?
இல்லை நாங்கள் சரி என்று நிற்போமா ?

வேதனை பெருகிய உள்ளங்கள் சல்லாபித்தன
வெற்றி அடைவதே இலக்கென நிர்ணயித்தன
முடிவினை அறிவிக்கவும் செய்தன - அதன்
பலனாய் பல புண்களும் பெற்றன

வாழ்வின்  ஓட்டம் நிற்கவில்லை
வளரும் காதலை தடுப்பது சாத்தியமில்லை
வலுக்கட்டாய படுத்துவதில் அர்த்தமில்லை
வாழ்ந்து  முடித்தவற்கு அது புரிவதும் இல்லை

எங்கள் கதைப்புகள் பெருகின
உள்ளங்கள் மிக நெருங்கின
மின்னல்கள் கண்களில் அரும்பின-காதல்
சின்னங்கள் பற்பல கூடின

கலாம் கடந்து போக
காலனும் மரப்பானம் பாசக்கயிறு விட
கலி காலமே முடிந்தாலும்
காதலர்களின் பெட்ட்றோர் எதிர்ப்பு மாறாதாம்

------------------------------------------------------------------ தொடரும்...... சுகுமார் ரா

No comments:

Post a Comment