Friday, 20 May 2011

என் காதல்-4

ஒருபக்கம் அவள் வலி குறைத்த சந்தோசம்
மறுபக்கம் முழுதாய் அவளை கவனித்துகொல்லாத துக்கம்
என்னை விட்டு போனது தூக்கம்
என்றும் தீராது அவளின் மேல் ஏக்கம்

உணவு இறங்கவில்லை
உடல் உறங்கவில்லை
உள்ளே அவள் நினைவலை
ஊன் உள்ளத்திலிருந்து நீங்கவில்லை

அவளிடமிருந்து மறுநாள் செய்தி வந்தது
அதை கேட்டு உள்ளம் இளைப்பாறியது
அவள் கூறியது இனிமையானது
அவளின் வேதனை குறைந்தது

உணவு அப்போதுதான் ருசியாய் தெரிந்தது
உண்ணும் வேகம் கூடியது
ஊரிலிருந்து கிளம்பும் நேரம் வந்தது
உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது

அடிக்கடி நலம் விசாரித்தேன்
அவளுக்கு என் காதலை சொல்ல முயன்றேன்
அப்போதும் தோல்வியுடன் கைகோர்த்தேன்
அவள் மனதில் இடம் பிடித்தேன்

மாற்றங்கள் பல அவளிடம்
மாறியதற்கு நானே காரணம்
மனதிற்கு இது சந்தோசம்
மனதில் உள்ளவளுக்கு இது பெருங்கஷ்டம்

No comments:

Post a Comment