Thursday, 19 May 2011

என் காதல்-2

உன்னை விட்டு வரவும் மனமில்லை
உன்னுடன் சேர்ந்து இருக்க நேரமுமில்லை 
என் நடையில் உயிர் இல்லை
உன்னை சுற்றியே வருகிரதேன் எண்ண அலை  
 
 வந்து சேர்ந்தேன் என்னிடத்திற்கு
வர துடித்தேன் உன் அருகிற்கு
காத்திருந்தேன் உன் பதிலுக்கு
நான் அனுப்பிய குருஞ்செய்திகளுக்கு
 
மனதளவில் உன்னுடன் சேர்ந்துவிட்டேன்
காதலை உன்னிடம் சொல்ல துடித்தேன்
உன் அழைப்புக்கு ஏங்கி தவித்தேன்
உன் குரலுடன் தின வாழ்வை தொடங்கினேன்
 
வந்தது உன்னிடமிருந்து குறுஞ்செய்தி
இருந்தது அதில் எனக்கோர் பேரதிர்ச்சி
உன் மாமன் மகளின் திருமணம்
நீ செல்ல வேண்டியது அவசியம்
 
இருப்பேனா நான் உன் குரல் கேளாமல்
இருப்பாயா நீ என்னுடன் கதைக்காமல்
எப்படி இருப்போம் நாம் காதலை பகிர்ந்துகொள்ளாமல்
முடியாது செல்வதை தவிர்ப்பது உன்னால்
 
இரு தினங்கள் பல யுகங்கலாயின 
ஈராயிரம் முறை அலைபேசியை கண்கள் நோக்கின 
உன்னுடன் பேச உதடுகள் துடித்தன 
உன் அழைப்புக்கு ஏங்கி உயிர் அணுக்கள் ஏங்கின
 
மூன்றாம் நாளும் இல்லை உன் அழைப்பு
என்றும் இப்படி இருந்ததில்லை என் பிழைப்பு
பெருகிக்கொண்டே செல்கின்றது தவிப்பு
அனைத்துக்கும் நான் தரும் பதில் ஒரு முறைப்பு
 
ஏன் உன் மேல் எனக்கு இவ்வளவு பாசம்
என்றும் என்னுள் இருந்ததில்லை இத்துனை நேசம்
நித்தமும் கோருது என்மனம் உந்தன் காதல் வாசம்
எக்கணம் மீண்டும் வீசும் உந்தன் சுவாசம் 
அலைபேசி ஒலித்தது
படபடப்பு பெருகியது
புதிய என் ஒன்று அதில் தெரிந்தது
மனம் ஏமாற்றத்துடன் கசந்தது
 
என் மனம் அங்குள்ள உன்னை சுற்றி
உன் உள்ளம் எண்ணுது என்னை பற்றி
எப்போது வரும் உந்தன் அழைப்பு
அப்போது அடங்கும் நம் தவிப்பு 
அழைத்தாய் அலைபேசியில் நீ
பகிர்ந்ததாய் அமுதத்தை நீ
அடங்கியது நம் தவிப்பு
மலர்ந்தது உதடுகளில் பூரிப்பு
 
காலையில் காண்பது உன் புகைப்படம்
விழித்ததும் செவியில் தேன்பாயும்
தினமும் இது நிகழும்
என் சுவாசம் உள்ளை வரை தொடரும்
 
மீண்டும் உன்னை காண எண்ணினேன்
மழுப்புதலாய் உன்னிடம் சொன்னேன்
துள்ளி குதித்தாய்
தயங்காமல் சம்மதித்தாய்
 
எங்கு சந்திப்பது நாம்
எழுபது நிமிடங்கள் விவாதித்தோம்
ஒரு முடிவிற்கு வந்தோம்
சந்திக்கும் இடத்தை தேர்ந்தெடுத்தோம்
 
அதே சத்யம் அரங்கின் வாசல்
மனங்களில் சந்திக்கும் ஆவல்
தூக்கமின்றி சிவந்த கண்கள்
இன்றாவது சொல்வேனா உன்மேலுள்ள காதல்???
 
சந்திக்கும் கணம் நெருங்கியது
உள்ளத்தில் கணம் கூடியது
நொடி நொடி கண்கள் அலைபேசியை கண்டது
உன் பாச சங்கேதங்கள் வந்து சேர்ந்தது
 
கண்டேன் உன்னை நான்
கண்களில் கோடி பிரகாசம் தான்
உன் கரம் பற்றினேன்
உன்னுடனே இருக்க தவித்தேன்
 
அழைத்து சென்றேன்
உன்னை மனதால் அனைத்து கொண்டேன்
காதலை சொல்ல வந்தேன்
சொல்ல மறந்து தவித்தேன் ………………..தொடரும்

No comments:

Post a Comment