Friday, 25 August 2017

பகுத்தறிவும் நாத்திகமும்..என் புரிதல்

தமிழ் மண்ணான பெரியார் கொள்கைகள் நிரம்பிய தமிழகத்தில் இன்று பகுத்தறிவு பேசுவது அரசியல் ரீதியாக அதுவும் அவர்களின் ஆதாயத்திற்கு பேசப்படுகிறது அதிகமாக.

எனக்கு புரிந்த பகுத்தறிவும் நாத்திகமும் இங்க பதிவிடுகிறேன்.

வெளித்தோற்றமாக பார்த்தால் பகுத்தறிவும் நாத்திகமும் ஒன்றினைன்தவை போல தான் இருக்கும். ஆனால் இரண்டும் வெவ்வேறு தான். ஏன் என்றால் நாத்திகர் பகுத்தறிவு கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை அதே போல் பகுத்தறிவுவாதி நாத்திகராய் இருக்க அவசியம் இல்லை.

ஆனால் நமக்கு சிலர் திரும்ப திரும்ப பகுத்தறிவு என்றால் குறிப்பிட்ட ஒரு மத,ஒரு சாதிய எதிர்ப்பு ,சில மதங்களுக்கு அதரவு என்ற வகையில் கருத்துக்கள் தினிக்க படுகின்றன.இன்னும் குறிப்பாக இங்கே பகுத்தறிவு பேசுபவர் ஒரு மதத்தின் கடவுளை மட்டும் மறுத்தால் தான் பகுத்தறிவு என்ற கருத்து தினிப்பு தான் நடக்கிறது.

சரி , பகுத்தறிவு என்றால் உண்மையில் என்ன?

எல்லா வற்றையும் பகுத்து ஆராய்ந்து புரிந்து கொள்ளுதல். சரி இதற்கு நாத்திகம் மட்டுமே வழி இல்லை. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பகுத்தறிவு வாதிகளாக இருக்கலாம். எல்லா நாத்திகரும் பகுத்தறிவாளர் இல்லை.நாத்திகம் என்பது கடவுள் மறுப்பு மட்டுமே. பகுத்தறிவு மனிதர்களை சமமாய் கருத வைக்கும் ஆனால் நாத்திகம் அதை உறுதி படுத்துவதில்லை.

சரி ஏன் இங்கே பகுத்தறிவு கடவுள் மறுப்போடு இருக்கு. காரணம் சொல்லப்பட்டது சாதி. சாதி மதம் மூலம் வந்தது,மதம் கடவுள் பெயரால் வந்தது. இதனால் கடவுளை மறுப்பதாக பெரியார் சொன்னார். ஆக அவர் கூற்றுப்படி பகுத்தறிவு என்பதற்கு கடவுள் மறுப்பு கட்டாயம் அல்ல சமத்துவம் முக்கியம். சாதி பெயரால் பளவு பட்டிருந்த சமூகத்தில் அதற்கு காரணமாக அவர் எண்ணிய கடவுளை மறுத்தார். ஆனால் இன்று ஏன் அவர் கடவுள் மறுப்பு கருத்து முன் வைத்தார் எண்பதை விட்டு விட்டு கடவுள் மறுப்பை மட்டுமே முன் வைப்பது பகுத்தறிவு பாதையில் இருந்து விலகுவது போல் இருக்கு. அதுவுமின்றி ஒரு மத எதிர்ப்பு மட்டுமே பகுத்தறிவும் இல்லை எண்பதை நாம் உணர வேண்டிய நேரமிது.

எவ்வாறு கடவுள் மறுப்பு இல்லாமல் பகுத்தறிவு பின்பற்றலாம்?

பதில் மிக எளிது. மனிதனாய் வாழ்ந்தால் போதுமானது. எல்லோரும் சமம் என்ற உணர்வு போதுமானது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரை விட பகுத்தறிவு சிந்தனை உண்டோ? அவர் கடவுள் நம்பிக்கை அதி பகவன் முதற்றே உலகு என்றதில் சொல்கிறார்.இதை விட கடவுள் நம்பிக்கை உள்ளவர் பகுத்தறிவும் உள்ளவராய் இருக்க முடியும் என்பதற்கு சான்று தேவயா?

இங்கே எல்லா மதங்களும் அடிப்படையாக போதிப்பது அன்பு ,அற நெறி, ஒழுக்கம். மதம் என்பது வாழ்க்கை முறை. கடவுள் என்பது நன் நெறி,அறம்,அன்பு மக்களிடம் சேர்க்க மனிதனால் பெயர் சூட்டப்பட்ட வழி,இந்த அண்ட சராசரத்தை இயக்கும் சக்தி்,அதற்க்கு நாம் பல பெயர்கள் இட்டோம். சிறு தெய்வம் முதல் பெரு தெய்வம் வரை எல்லாம் நாம் மனித நேயத்துடன் வாழ உருவாக்கிய பெயர்கள் தான். அதனால் அதில் உள்ள நந்நெறிகளை பின்பற்றினாலே பகுத்தறிவோடு நாம் வாழ்வோம்.

இடையில் வந்த மூட நம்பிக்கைகள் மறுத்து நந்நெறிகளுடன் வாழ்தல் பகுத்தறிவே. கடவுள் மறுப்பினால் பல நந்நெறிகளை நாம் இழக்கிறோம் என்பதை உனர வேண்டும். மூட நம்பிக்கை,சாதி மறுத்தாலே போதுமானது.

நாத்திகம் அவரவர் நம்பிக்கை. அனால் நாத்திகம் சமத்துவம் அடிப்படையில் வந்தது அல்ல. வெறும் கடவுள் மறுப்பில் வந்தது. அதில் பகுத்தறிவும் சேர்ந்து இருக்கும் பட்சத்தில் நன்றே.

பகுத்தறிவு என்ற பெயரில் மக்களை ஒரு மத்த்தின் நன்நெறிகளை பின்பற்றுவதே தவறு அந்த மதமே தவறு அதில் சில சாதியினறை மட்டும் இழிவு படுத்துவது போல எந்நேரமும் பேசுவது பகுத்தறிவு என்ற பெயரில் சுய லாபம் தேடும் செயலாய் இருக்கும் பகுத்தறிவாய் அல்ல.

இன்று பொருளாதார அடிப்படையில் ஏற்றத்தாழ்வு அதிகமாகிறதே இது பகுத்தறிவாளர்களிடமும் இருக்கே. இதற்கு நாம் என்ன செய்ய போகிறோம்.

சாதி ஒழிப்பதற்கு மதத்தையும் கடவுளையும் சாடினார்கள் பகுத்தறிவு எனும் பெயரில்.
அதற்குள்ளே இந்த பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வு சாதியை விட அதிக அளவில் வந்திருக்கே இதை எதை வைத்து நாம் எந்த பகுத்தறிவு பயன்படுத்த போகிறோம்? இல்லை அறம் ,மனிதம் கொண்டு களையப்போகிறோமா?

காலம் பதில் சொல்லும் என நம்புவோம்.

No comments:

Post a Comment