சமீப காலமாக ஊடகங்களில் நடக்கும் விவாதங்களை பார்க்கும் போது இந்த சந்தேகம் எழாமல் இருப்பதில்லை.
உண்மையாக தலையாய பிரச்சனைகளை எல்லாம் விட்டு விட்டு மற்ற விடயங்களை விவாதிக்கிரார்கள் என்றே தோன்றுகிறது.
பல நாட்களாக நடக்கும் நெடுவாசல் ,கதிராமங்களம்,மீனவர் போராட்டங்களை மருந்துக்கு ஓரிரு முறை மட்டுமே விவாதித்து, மக்களுக்கு அதிக முக்கியத்துவம் இல்லாத அதிமுக உட்கட்சி பூசல்,ரசினி கமல் அரசியலுக்கு வருவார்களா மாட்டார்களா, பிக்பாஸ் தேவையா இல்லையா என்ற முக்கியத்துவம் குறைந்த விடயங்களை அதிகமாக விவாதிப்பதன் பொருள் என்ன?
உ பி மாநிலத்தில் 60 குழந்தைகள் இறந்ததை பற்றி விவாதிக்க நேரம் இல்லாதது ஏன் ஏன்று புரியவில்லை. அதை விடவா அதிமுக உட்கட்சி பூசல் பெரிதானது?
குஜராத் மாநிலங்களவை நனதேர்தலை பற்றி விவாதம் செய்ய தெரிந்த இவர்களுக்கு உபி குழந்தைகளின் மரணங்கள் விவாத பொருளாக தென்படாதது ஏனோ?
தேசிய ஊடகங்களில் கூட இதை விவாதிக்க தயாராக இல்லாதது ஏனோ?
இன்று ஊடக தர்மம் என்று ஒன்று இருக்கிறதா?
இல்லை சிலரின் விருப்பத்திற்கேற்ப இவர்கள் நடக்கிறார்களா?
பிக்பாஸை விவாதித்த அளவிற்கு கூட விவாசாய பிரச்சனைகளை விவாதிக்காததை பார்த்தால் அதிலிருந்து மக்களை திசை திருப்புகிறார்களோ என்ற ஐயம் வருகிறது..
ஊட்கங்கள் தமது நடுநிலைமையை ,முக்கியத்துவம் குடுக்கக வேண்டிய விடயங்களை பற்றிய பார்வையை சுய பரிசோததனை செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகவே பெரும்பாலான மக்கள் எண்ணுகிறாற்கள்...அது நடக்குமா?
மக்களில் ஒருவன்
No comments:
Post a Comment