பொய்யா பேசுறான் இவன் பொய்யா பேசுறான்
உண்மை என்றால் அர்த்தம் தெரியாதென்றான்
குடுத்த வாக்கு காத்துல போச்சு
இவனை நம்பி எங்க நிம்மதி போச்சு
தினம் தினம் ஒரு புது கதை
நித்தமும் இதே தொடர்கதை
கடமையை செய்யல
அதன் அர்த்தமும் தெரியல
கேள்வி கேட்டா வருது கோபம்
எங்க வாழ்க்கை ஆச்சு ரொம்ப பாவம்
இவன் என்ன செய்ய போறான்
ஒன்னும் புரிய வில்ல
வாங்கின காசுக்கும் வேலை செய்யல
கடமையாகவும் ஒன்னும் செய்யல
வாயில வடை தான் சுடுறான்
மனசாட்சி இல்லாம இருக்கான்
மானம் இருக்கா என்று தெரியல
மனசாட்சி இருக்கா என்று புரியல
எதுக்கு இந்த பொழப்பு
தேவையா உனக்கு காரி துப்பு
No comments:
Post a Comment