Monday 21 January 2013

என் காதல் 17

வேதனையில் வாடின உள்ளங்கள்
வேர்த்து கொட்டிய நெற்றிகள்
வேரின்றி நின்ற நெஞ்சங்கள்
வேறு பட்டன இருப்பிடங்கள்

எவ்வாறு சிந்திப்போம்
எவ்வாறு சிலாகிப்போம்
என்று ஒன்று சேர்வோம்
எவ்வாறு வாழ்வோம்

கேள்விகள் பல மனதில்
கேட்டும் கிட்டவில்லை பதில்
கேட்பது நாங்கள் யாரிடதிதில்
கலப்பது என்று ஓரிடத்தில்

இருக்கும் வாய்ப்புகளை தேடினோம்
இருப்பினும் சந்தித்தோம்
இரும்பு உள்ளங்களை கரைக்க துடித்தோம்
இம்மியளவு கரைத்தோம்

காலம் கடந்து சென்றது
கல் நெஞ்சங்கள் கரைய துடங்கியது
கல்யாணம் செய்ய மட்டும் மறுத்தது
கள்ள நெஞ்சம் வெளிப்பட்டது

விடவில்லை நாங்கள்
விடாமுயற்சி வீரர்கள்
விண்ணுலகம் எதிர்த்தாலும்
வெற்றி பெற நினைப்பவர்கள்

அவளின் இருப்பிடம் மாறியது
அன்றே சந்திக்கும் வாய்ப்பு வந்தது
அக்கணமே தவிப்பு நீங்கியது
அரவணைப்புகள் துவங்கியது

நினைத்த நேரம் சந்தித்தோம்
நினைத்ததை விட காதல் பரிமாறினோம்
நினைத்ததை போல் வழ எண்ணினோம்
நிஜமான காதலை புரிய வைக்க தொடங்கினோம்

காதலின் ஆழம் புரிந்தது -அதை
கருவறுக்க கரங்கள் நீண்டது
காதலை அழிக்க அவர்கள் மனம் துடித்தது
கவலைகளில் அவர்கள் நெஞ்சங்கள் வாடியது

மீண்டும் முதலுக்கு வந்தது
மீட்டு சென்றனர் அவர்கள் மகளை
மிரட்டி பார்த்தனர்
மிரண்டு போனார்கள்

No comments:

Post a Comment