Sunday 19 May 2019

பொய்யா பேசுறான்

பொய்யா பேசுறான் இவன் பொய்யா பேசுறான்
உண்மை என்றால் அர்த்தம் தெரியாதென்றான் 
குடுத்த வாக்கு காத்துல போச்சு 
இவனை நம்பி எங்க நிம்மதி போச்சு 

தினம் தினம் ஒரு புது கதை 
நித்தமும் இதே தொடர்கதை 
கடமையை செய்யல 
அதன் அர்த்தமும் தெரியல 

கேள்வி கேட்டா வருது கோபம் 
எங்க வாழ்க்கை ஆச்சு ரொம்ப பாவம் 
இவன் என்ன செய்ய போறான் 
ஒன்னும் புரிய வில்ல 

வாங்கின காசுக்கும் வேலை செய்யல 
கடமையாகவும் ஒன்னும் செய்யல 
வாயில வடை தான் சுடுறான் 
மனசாட்சி இல்லாம இருக்கான் 

மானம்  இருக்கா என்று தெரியல 
மனசாட்சி இருக்கா என்று புரியல 
எதுக்கு இந்த பொழப்பு 
தேவையா உனக்கு காரி துப்பு